மலையகத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஒரு பகுதி!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி!

இலங்கையில் காலநிலை சீற்றத்தால் மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கண்டி நகரத்திலுள்ள வங்கியொன்றின் பிரதான கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள பல கடைகள், இன்று காலை குறித்த கனமழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் ,அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி, கடைகள் உள்ளிட்டவைகளும் சுமார் மூன்று அடி நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

இதேவேளை நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.