யாழில் வெள்ளை வானில் வந்த மர்ம நபர்களால் இளம் பெண் ஒருவர் கடத்தல்!!

யாழில் வெள்ளைவானில் கடத்தப்பட்ட யுவதி!

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத மர்ம நபர்களால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேலும் தெரியவரும் விடயம்,
நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த 20 வயது பெண்ணை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.