கொழும்பில் காரினுள் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு!

கொழும்பில் காரினுள் சடலம் ஒன்று மீட்பு..

நேற்றைய தினம் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் காருக்குள் இருந்து நபர் ஒருவர் சடலாமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய கொழும்பு கொட்டாஞ்சேனை, அலுத்மாவத்தை பிரதேசத்தில் கார் ஒன்றுக்குள் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருவதோடு, இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த நபர் குறித்து நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் காருக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என்றும், கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் திட்டமிடல் முகாமையாளராக பணிபுரிந்து வருபவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.