இலங்கையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள்..தீவிரமடையும் கொரோனா!!

இலங்கையில் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்!

Students wearing facemasks gesture as they pray inside their school after it was reopened in Colombo on July 6, 2020. – Sri Lankan government officially announced all schools to reopen from July 6 for students in Grade 5, 11 and 13 after being closed since March due to lockdown which was imposed as a preventive measure against the spread of the COVID-19 coronavirus. (Photo by LAKRUWAN WANNIARACHCHI / AFP)

நாட்டில் இன்று முதல் வழமை போன்று அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்துக்கள் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் மீண்டும் ஒரே நேரத்தில் சமூகத்திற்குள் செல்வதனால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு மக்களிடம் அவர் வேண்டிக்கொண்டுள்ளார்.

இலங்கையில் இதுவரையில் 2844 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 2579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் தற்போது 252 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.