மல்வான பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக பலி!

மல்வான பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!

தொம்பே, மல்வான பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்ததால் எதிரில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவருடைய மகளும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 42 வயதுடைய தாயும் அவருடைய 19 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.