வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து!

வவுனியாவில் பேருந்து விபத்து!

வவுனியாவில் இன்று இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்து பூவரசங்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்டிகுளம் பகுதியிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வவுனியாவிற்கு சென்ற இ.போ.ச. சாலை பேருந்து பூவரசங்குளம், சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று பேருந்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது.

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளது. எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.