இலங்கையில் அதிகரித்து வரும் கோரோனா நோயாளிகள்!

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 871 ஆக உயர்வடைந்துள்ளது.

‍நேற்றைய தினம் சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 23 கைதிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த நால்வரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் குணமடைந்து நேற்று வைத்தியசாலையைவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 593 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 267 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 70 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

அத்தோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.