இலங்கையின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

இலங்கையில் கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இம்முறை தெரிவு செய்யப்படாத 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தை ஐந்தாண்டுகள் பூர்த்தி செய்யாததே இதற்கு காரணம். ஐந்தாண்டுகள் ஒருவர் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், தேசிய பட்டியல் மூலமாகவும் பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தனர்.

இதனால், கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஐந்தாண்டு பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகள் பதவி வகித்த ஒருவருக்கு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு வீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களே அதிகளவில் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒய்வூதியத்தை இழந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நான்கு பேரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த இரண்டு பேரும், மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த ஒருவரும் தமது ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

ஓய்வூதியத்தை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சி
மலிக் சமரவிக்ரம,
ஹிருணிகா பிரேமச்சந்திர,
சத்துர சேனாரத்ன,
ஆனந்த அளுத்கமகே,
பந்துலால் பண்டாரி கொட,
சந்திம கமகே, கருணாரத்ன பரணவிதான,
தயா கமகே,
ஆசு மாரசிங்க,
சமன் ரத்னபிரிய,
நடராஜா திலகேஷ்,
எஸ்.வேலு குமார்,
மொஹமட் மன்சூர்,
சிசிர குமார,
ரஹ்மான் இஸ்தான்,
நாலக கொலன்னே,
துசிதா விஜேமான்ன,
சந்தித் சமரசிங்க,
எம்.நவவி,
எம்.சல்மான்,
ஏ.ஹபீஸ்,
ஜயம்பதி விக்ரமரத்ன,
மயந்த திஸாநாயக்க.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நிரோஷன் பிரேமரத்ன,
மனோஜ் சிறிசேன,
மலித் ஜயதிலக்க,
மக்கள் விடுதலை முன்னணி

நளிந்த ஜயதிஸ்ஸ
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா,
சிவபிரகாஷம் சிவமோகன்,
கே.கோடிஸ்வரன்,
ஈஸ்வரன் சரவணபவன்.