யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த நபர்களால் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று மாலை 04:00 மணியளவில் தென்மராட்சி, வரணிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தை பலரும் பாத்திருக்க அறுக்கப்பட்டுள்ளதானது அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரியில் இருந்து வரணியில் உள்ள தனது வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த குறித்த ஆசிரியையை, FZ ரக மோட்டார் சைக்கிளில் இருவர் பின் தொடர்ந்துள்ளனர், ஆசிரியையின் வீடு அண்மித்ததும் திருடர்கள் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர், குறித்த பகுதியில் cctv கமெரா இருந்துள்ள போதும், அது குறித்த நேரத்தில் இயங்கவில்லை என உரிமையாளரால் காண்பிக்கப்பட்டுள்ளது, பொலிஸார் அதனையும் பரிசீலனை செய்து வருகின்றனர்