இலங்கையில் கோழிமுட்டைக்கான விலை அதிகரிப்பு!

இலங்கையில் முட்டை விலையில் அதிகரிப்பு..

இலங்கை சந்தையில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய சந்தையில் முட்டையொன்றின் விலை 22 ரூபாயாக அதிகரித்துள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திக்காக அதிளவான முட்டைகள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக சந்தையில் முட்டைக்கான நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.