பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

முல்லேரியா

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கி சூட்டாளரும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவரும் ஹெமதிலக்க எனப்படும் ” சொல்தா” காவற்துறை துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லேரியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது காவற்துறை மீது கை குண்டு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது காவற்துறையினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மெலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.