அமெரிக்க துணை ஜனாதிபதியாக தமிழ் பெண் கமலா ஹரீஸ் வர உள்ளாரா ?

கமலா ஹரீஸ்

தமிழர்கள் வரலாறு தலை நிமிர்ந்து சென்றுகொண்டு இருக்கிறது… ஆம் நாம் அனைவரும் பெமையடைய வேண்டிய தருணங்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜே-பிடன் ரம்பை விட முன் நிலை வகித்து வருகிறார்.

இன் நிலையில் அவர் சற்று முன்னர் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளார். அது என்னவென்றால், தான் அமெரிக்க ஜனாதிபதி ஆனால், துணை ஜனாதிபதியாக தமிழரான கமலா ஹரீசை நியமிப்பேன் என்பது தான். இது நடக்குமேயானால் ஒரு வரலாறு தான்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் டிரம்ப்பும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும் களத்தில் உள்ளனர். இதில் ஜே பீடனுக்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த அதிபர் தேர்தலில் தொடக்கத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸும் போட்டியில் இருந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரால பதவி வகித்த கமலா ஹாரீஸ் 2016-ல் அம்மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கும் தேர்வானார். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் எதிர்கால தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுவர் கமலா ஹாரீஸ்.

கமலா ஹாரீஸ், ஜோ பிடன் , பெர்னி சாண்டெர்ஸ் ஆகியோர்தான் ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக போட்டியில் இருந்தனர். பின்னர் கமலா ஹாரீஸ், நிதி சிக்கலை முன்வைத்து போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் இருக்கிறார். ஆனால் ஒருவருக்கும் இடையே நல்ல நடப்பு இருக்கிறது. இதனை அடுத்தே ஜே பீடன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.