இலங்கையில் சத்தமில்லாமல் சீனா செய்த விடயம்; கொடுக்கும் புது விளக்கம்!

இலங்கையில்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டு இடங்களின் ‘CHINA SW’ என்ற சர்ச்சைக்குரிய கட்டடங்கள் தொடர்பான செயற்கைகோள் படங்கள் தொடர்பில் சீன தூதரகம் விளக்கம் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஊடகங்களில் இது தொடர்பான புகைப்படங்களுடன் பல செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன.

இதையடுத்து, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கூகுள் வரைபடங்களின் செயற்கைக்கோள் காட்சி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள பல கட்டடங்களை வான்வழி பார்வையில் இருந்து பார்க்கும் போது CHINA SW என்ற சொற்களை சித்தரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

மற்றொரு செயற்கைக்கோள் படம் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தைக் காட்டுகிறது,

இது “CHEC” என்ற வார்த்தையை சித்தரிக்கிறது, இது சீனா ஹார்பர் பொறியியல் நிறுவனத்தை குறிக்கிறது.

மேலும், அருகில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் ஒரு விமானத்தின் வடிவத்தை சித்தரிக்கிறது.

அந்தந்த நிறுவனங்களுக்கு கட்டிடங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் ஆரம்ப திட்டம் நீட்டிக்கப்பட்டது, என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.