இலங்கையில் நேற்று அடையாளம் காணப்படட கொரோனா தொற்றாளர் தொடர்பான தகவல்!

கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் ஒருவருக்கு மாத்திரே கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எகிப்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பிரஜை ஒருவருக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 881 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 16 பேர் நேற்று குணமடைந்துள்ளனர் என தேசிய தொற்று நோய் தடுப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைவடைந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டாரில் இருந்து 299 இலங்கையர்கள் நாடு திரும்பியிருந்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

கட்டாரின் டோஹா நகரில் இருந்து இலங்கை வந்த 15 பேரில் 10 பேர் இலங்கையர்கள் என்பதோடு ஏனையவர்கள் இலங்கைக்கான இத்தாலி மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.