பதவியேற்ற புதிய விளையாட்டுத் துறை அமைச்சரின் முதலாவது நடவடிக்கை….

விளையாட்டுத் துறை அமைச்சரின் முதலாவது நடவடிக்கை….

நாட்டில் விளையாட்டுத்துறையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

“நாட்டில் கிரிக்கட் தொடர்பில் மாத்திரமே அதிகம் கதைக்கின்றனர். ஆனால் மெய்வல்லுனர் உள்ளிட்ட இன்னும் பல விளையாட்டு பிரிவுகள் உள்ளன.

அவற்றையும் மேம்படுத்துவது முக்கியம். ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளை பெற்று அந்தந்த துறைகளுக்கு அவற்றை பயன்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற கிரிக்கட் வீரர்களின் ஒத்துழைப்புடன் நாட்டின் கிரிக்கட் துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அவற்றுள் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

நாட்டில் அனைத்து விளையாட்டுக்களிலும் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.