யாழில் இளம் ஆசிரியர் ஒருவர் தற்கொலை!

இளம் ஆசிரியர் தற்கொலை..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இவ் ஆசிரியர் முல்லைத்தீவு மகா வித்தியாலய சித்திர மற்றும் தமிழ் பாட ஆசிரியர் ஆவார்.

க.கலைமாறன் என்ற அளம்பில் றோ.க மகா வித்தியாலயம்,செம்மலை ம.வி யிலும் சித்திரப் பாடத்தைக்கற்பித்து வந்த ஆசிரியரே நேற்றைய தினம் (28.08.2020) தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர் முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை கலைவாணி கல்வி நிலைய ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

இவர் நேற்றைய தினம் இரவு யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.