தந்தையை இழந்த மாணவருக்கு இரண்டு இலட்சம் நிதி கொடுப்பணவு..

தந்தையை இழந்த மாணவருக்கு இரண்டு இலட்சம்!

இலங்கையில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான SURAKSHA நிதிக்கொடுப்பனவு தொடர்பில் பலர் இதுவரையில் அறியாமலிருப்பதுடன்,பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கும் தெரியாத விடயமாகக் இது காணப்படுகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது.

குடும்பத்தில் தந்தையை இழந்த மாணவன் பாடசாலையில் கல்வி கற்பவனாக இருப்பதோடு, தமது தந்தையை இழந்து 90 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில், குறித்த மாணவருக்கு 200,000 ரூபா வீதம் கிடைக்கும்.

இது தொடர்பான விண்ணப்பங்களை SRILANKA INSURANCE CORPORATION (DEPARTMENT OF SHRAKSHA) நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு மற்றும் குடும்பத்தாருக்கு இவ்விபரத்தை கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான கடமையாகும்.