க.பொ.த சாதாரண தர விண்ணப்பத்திற்கான முடிவுத்திகதி மேலும் நீடிப்பு..!

க.பொ.த சாதாரண தர விண்ணப்ப திகதி நீடிப்பு..

இவ் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி மேலும் ஒரு வாரம் நீடிப்பதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் சனத் பூஜித, இதுவரை 350,000 க்கும் மேற்பட்ட பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தனியார் விண்ணப்பதாரர்களிடமிருந்து குறைவான விண்ணப்பங்கள் பெறப்படாததால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் முடிவுத் திகதியாக 7.9.2020 பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.