வவுனியாவில் மாணவியை துஷ்பிரயோக செய்ய முயற்சித்த வீட்டுரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வவுனியாவில் நடந்த சம்பவம்…

வவுனியாவில் உள்ள பட்டக்காடு பிரதேசத்தில் சென்ற வெள்ளிக்கிழமை இரவு வீடு ஒன்றில் தங்கியிருந்து தனது கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது வீட்டு உரிமையாளர் தகாத நடவடிக்கையில் ஈடுபடுள்ளார்.

இதன் போது பயத்துக்குள்ளான மாணவி சத்தம் போட்டுள்ளார். இதன் பின்னர் அயலவர்களின் முயற்ச்சியினால் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தடுக்கப்பட்டு வீட்டு உரிமையாளரான 51 வயதுடைய நபர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

பட்டக்காடு பள்ளிவாசலுக்கு அருகில் வசித்துவரும் 51 வயதுடைய வாடகை வீட்டின் உரிமையாளர் பல்கலைக்கழத்தில் பயின்றுவரும் மாணவி ஒருவரை கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது பிறிதொரு வீட்டில் வாடகைக்குத் தங்கவைத்துள்ளார் .

இதனை அடுத்து சென்ற வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த மாணவி தங்கியிருந்த அறைக்குள் சென்று மாணவி மீது துஷ்பிரயோக நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டுள்ளார் .

சம்பவம் இடம்பெறவுள்ளதை உணர்ந்து கொண்டு மாணவி சத்தமிட்டுள்ளார் . இதையடுத்து சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு சென்ற அவர்களின் உதவியுடன் குறித்த நபர் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் .

மேலும் குறித்த நபர் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வருகின்றார் . கடந்த மூன்று மாதங்களாக பல்கலைக்கழக மாணவி ஒருவரை தனது மற்றைய வீட்டில் தங்கவைத்துள்ளார் . அவர் இரண்டு மனைவிகள் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .