கண்டியில் இன்று மற்றுமொரு நில அதிர்வு!

கண்டியில் இன்று மீண்டும் நில அதிர்வு!

கண்டி பல்லேகல பிரதேசத்தில் இன்று (02) காலை ஒருவகை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 07.05 அளவில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் இது நில அதிர்வா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட அதிர்வா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஓகஸ்ட் 29ம் திகதி இரவும் கண்டி – பாரகம பிரதேசத்தில் ஒருவகை அதிர்வு உணரப்பட்ட நிலையில் அதுவும் நில அதிர்வா என இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.