இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு அரச வேலை! விண்ணப்பித்தவர்களுக்கு ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை..!

ஒரு லட்சம் இலங்கையர்களுக்கு அரசாங்க வேலை!

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

தொழில் பெறுவதற்காக எவரும் பணம் இலஞ்சம் வழங்கினால் அவர்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் செயலணி ஒன்று அமைத்து வறுமையில் வாடும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.