மகியங்கனையில் பள்ளத்தில் வீழ்ந்த கார் -விரிவுரையாளர் ஐவர் படுகாயம்!!

மகியங்கனையில் கோர விபத்து…!

பதுளை – மகியங்கனை – சொரணதொட்ட பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி விரிவுரையாளர்கள் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 2.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் தெரிய வருவது, விரிவுரையாளர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையினால் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன் போது காரில் இருந்த பெண் விரிவுரையாளர்கள் நால்வரும் ஆண் விரிவுரையாளர் ஒருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இவ் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.