மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் கோர விபத்து-இளைஞர்கள் இருவர் பலி!

மட்டக்களப்பில் கோர விபத்து இரண்டு இளைஞர்கள்

நேற்று மட்டக்களப்பு – மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாப் பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர் .

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விபத்தில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய துலக்ஸன் மற்றும் 20 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பொதுமக்களினால் பேருந்து சேதமாக்கப்பட்டதுடன், குறித்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.