நாட்டில் 5 மாதங்களின் பின்னர் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்..!

மீண்டும் வழமைக்கு திரும்பும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள்…

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்று முதல் வழமைபோன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம், முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான மாணவர்களுக்கு செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

அதனை அடுத்து கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடங்ப்பட்டன.

அதேநேரம் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கமைய, தரம் 10-13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.