மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

மட்டக்குளி விபத்தில் இருவர் பலி!

மட்டக்குளி பகுதியில் இன்று (2) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆட்டோவொன்றில் பயணித்த இருவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளதுடன் மற்றுமொரு ஆட்டோவில் பயணித்த இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியொன்றும் ஓட்டோக்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்விபத்தை தொடர்ந்து லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.